பிச்சைக்காரனை தொடர்ந்து ‘இறைவி’யை வெளியிடும் நிறுவனம்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் அதை தயாரித்தவர்களையும் வெளியிட்டவர்களையும், வாங்கி திரையிட்டவர்களையும் கோடீஸ்வரர்கள் ஆக்கிவிட்டது.. இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியதன் மூலம் பட விநியோகத்தில் காலடி எடுத்துவைத்த கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம், படத்திற்கான பப்ளிசிட்டி, புரமோஷன்களை பக்காவாக செய்து மக்களிடம் படத்தை கொண்டுபோய் சேர்த்தது..

இதனாலேயே அடுத்ததாக ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு மிகப்பெரிய படமும் இவர்களை தேடிவந்துள்ளது. ஆம்.. சிவிகுமார், அபி&அபி மற்றும் ஸ்டுடியோகிரீன் மூவரும் இணைந்து தாயாரித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறைவி’ படத்தையும் அடுத்ததாக இந்த நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது. இந்த நிறுவனத்துடன் ‘ஏரியா 78’ மற்றும் ‘ஸ்கைலார்க்’ நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன.

Bobby SimhaIraiviKarthick SubburajPichaikkaranS J SuryaVijay Sethupathi