கார்த்திக் சுப்புராஜ் தனது மூன்றாவது படமான ‘இறைவி’யை நேற்று பூஜை போட்டு துவங்கிவிட்டார். இயக்குனர் பாலா ரூட்டில் தனது முதல் பட ஹீரோ விஜய்சேதுபதியையும், இரண்டாவது பட நாயகன் பாபி சிம்ஹாவையும் இணைத்து இந்த ‘இறைவி’யை ஆரம்பித்துவிட்டார். கூடவே மூன்றாவது ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யாவும் நுழைந்திருப்பது டர்னிங் பாய்ண்ட்.
கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். அவரது ரீ என்ட்ரியில் அவரை பேசவைக்கும் படமாக இது இருக்கும் என்பது உறுதி. நகைச்சுவைக்கு கருணாகரன், காளி வெங்கட் இருவர் உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை, சி.வி.குமார் தயாரிப்பு என ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜூடன் ஒன்றிணைந்து வெற்றியை ருசித்த கூட்டணியே இதிலும் தொடர்கிறது. கூடவே ஞானவேல்ராஜாவும் தயாரிப்பில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.