பரத்தை ஏமாற்றும் அவரது நண்பர்கள்..!

‘ஐந்தாம் தலைமுறை வைத்திய சிகாமணி’.. இதுதான் பரத் நடிக்கும் புதிய படத்தின் பெயர். இந்தப்படத்தில் அப்பாவி மருத்துவராக, படிப்பறிவு இல்லாதவராக, நண்பர்களோட அரட்டை அடிக்கிறவராக பரத்தின் மேனரிசத்தையே டோட்டலாக மாற்றியிருக்கிறார்களாம். கவிதாலயா தயாரிக்கும் இந்தப்பட்த்தை இயக்குகிறார் எல்.ஜி.ரவிசந்தர்.

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியான பரத்தை, படிப்பறிவு இல்லாத அவரோட நண்பர்கள் ஏமாற்றுகிறாங்க. ஒரு கட்டத்துல இது பரத்துக்கு தெரிய வரும்போது, அதுல இருந்து தப்பிக்க படிச்ச ஒரு பெண்ணை மனைவியா ஆக்கணும்னு நினைக்கிறார். அது எப்படி நடக்குது அப்படிங்கறதுதான் கதை. பரத்திற்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ நந்திதா நடிக்கிறார்.

கதைப்படி பரத் சீரியசாக வந்தாலும் ஆடியன்சுக்கு காமெடியாதான் இருக்கும் என்று கூறும் டைரக்டர் எல்.ஜி. ரவிசந்தர், “கன்னடத்துல டாப் காமெடியனா இருக்கிறவர் கோமல் குமார். கன்னட ‘சந்திரமுகி’யில் வடிவேலு கேரக்டர் பண்ணியவர் இவர்தான். காமெடிக்கு புதுசா ஒருமுகம் தேவைப்பட்டது. அதனால அவரைக் கொண்டு வந்திருக்கோம். அவருக்கும் பரத்துக்குமான காமெடி கலக்கலா வந்திருக்கு” என்கிறார். இதுதவிர தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, உட்பட 21 காமெடிய நடிகர்கள் நடிக்கிறார்களாம்.

Bharathinthaam thalaimurai vaithiya siagamaniNanditaஇமான் அண்ணாச்சிஎல்.ஜி. ரவிசந்தர்ஐந்தாம் தலைமுறை வைத்திய சிகாமணிகருணாகரன்தம்பி ராமையாநந்திதாபரத்மனோபாலா