படத்திற்கு பெயர் வைப்பதில் மட்டுமல்ல, நிஜத்திலும் ‘நன்பேண்டா’ என நிரூபித்துவிட்டார் உதயநிதி.. வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது.
இந்தப்படத்தை சந்தானமே தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். சந்தானம் படம் என்பதால் ஈசியாக பிசினஸ் ஆகிவிடும் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் பப்ளிசிட்டி செய்து படத்திற்கு ரசிகர்களை இழுக்கவேண்டும் என்றால் அது ரெட் ஜெயண்ட் போன்ற நிறுவனங்களுக்கு மற்றுமே சாத்தியம்.
சந்தானத்தின் நண்பர்களான முருகானந்த் என்கிற இரட்டையர்கள் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஆஸ்னா ஜாவேரி மற்றும் அகிலா கிஷோர் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தம்பி ராமையா படம் முழுவதும் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.