2 நிமிட சேசிங்கிற்கு 4 நாள் ரிகர்சல்.. 13 மாத கிராபிக்ஸ்.. மிரட்டும் இந்திரஜித்..!

கலைப்புலி தாணுவின் மகன் கலாபிரபு தற்போது இயக்கியுள்ள படம் இந்திரஜித். இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் க்ளைமாக்சில் கௌதம் கார்த்திக்கிற்கும் வில்லன் சுதன்ஸு பாண்டேவுக்குமான மிக முக்கியமான சேசிங் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக்காட்சியை ஹைதராபாத்தில் உள்ள மலைப்பகுதியில் படமாக்கியுள்ளனர். படத்தில் வெறும் இரண்டே நிமிடம் மட்டும் இடம்பெறும் இந்த சேசிங் காட்சிக்காக நான்கு நாட்கள் இவர்கள் இருவரும் ரிகர்சல் பார்த்தார்களாம். அதுமட்டுமல்ல, இந்த காட்சி இன்னும் தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக சுமார் 13 மாதம் கிராபிக்ஸ் கிராபிக்ஸ் பணியும் நடைபெற்றதாம்.

Gautham KarthickIndrajithKalaipuli S Dhanuஇந்திரஜித்கெளதம் கார்த்திக்