பூமியில் மட்டும் அல்ல ஆகாயத்திலும் ‘இந்தியன் 2’! – பட்டைய கிளப்பும் லைகா

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

வரும் ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் விளம்பர பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், இயக்குநர் ஷங்கர் ஆகியோரது கூட்டணி பல்வேறு நாடுகளுக்கு சென்று விளம்பர பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், லைகா நிறுவனம் பல புதிய யுக்திகள் மூலம் படத்தை விளம்பர படுத்தி வருகிறது.

அந்த வகையில், துபாயில் ஸ்கை டைவிங் மூலமாகவும் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது. சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டவிங் வீரர்கள் பறந்தபடியே தங்களுடன் ‘இந்தியன் 2’ விளம்பரத்தையும் பறக்கவிட்டு, பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்கள். இதன் மூலம் பூமியில் மட்டும் அல்ல ஆகாயத்திலும் ‘இந்தியன் 2’ படத்தின் போஸ்டரை பறக்கவிட்டு மாஸ் காட்டியிருக்கும் லைகா நிறுவனம் விளம்ப பணிகளில் பட்டைய கிளப்புகிறது.

Indian 2indian 2 banner in dubai sky diwingKamal HassanLyca Productionspan india movie indian 2Shankarஇந்தியன் 2கமல்ஹாசன்லைகாஷங்கர்