தொழில்நுட்பம் பெற்ற அபரிவிதமான வளர்ச்சியில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. எதிர்காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகரிக்கும், அத்தகைய சூழலில் இணையதளத்தை எப்படி பயன்படுத்தவது, இண்டர்நெட் மூலமாக நடைபெறும் குற்றங்களான, சைபர் க்ரைம்கள் அதிகரிப்பும், அதனில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும் விளக்கமாக சொல்ல வருகிறது ‘இணையதளம்’ என்கிற படம்.
கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் சுவேதா மேனன் நடித்திருக்கிறார். ஷங்கர் – சுரேஷ் என்ற இரட்டையர் இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமும், சுவேதா மேனனும் சைபர் க்ரைம் போலீசாக நடித்துள்ளனர். கோவையில் உள்ள கார் ரேஸ் மைதானத்தில் இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளதாம்.