ஜீன்ஸ் விவகாரத்தில் ஜேசுதாஸை கிண்டலடித்த நடிகை..!

பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு பெண்கள் அமைப்பினரிடம் இருந்து கண்டன கணைகளும் அவரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. யானை படுத்துக்கிடந்தால் எலி ஏறி விளையாடுமாம்.. சில நாட்களாக அதுபோல ஆகிவிட்டது பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் நிலை. 

சரி.. அப்படி என்னதான் சொல்லிவிட்டார். ‘‘பெண்கள் ஜீன்ஸ் ஆடைகள் அணிவது நமது கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல. ஜீன்ஸ் ஆடைகள் மூலம் மற்றவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்த கூடாது. நமது பண்பாட்டுக்கு ஏற்ற வகையில் அவர்கள் ஆடைகள் அணிய வேண்டும், எளிமையும் அன்பும்தான் பெண்களின் மிக சிறந்த பண்புகள்’’ இதுதான் அவர் சொன்னது.

இப்போது லேட்டஸ்ட்டாக சஜிதா மாடத்தில் (என்ன கண்றாவி பெயரோ) என்ற துணை நடிகை,தான் ஜீன்ஸ் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு அதற்கு கீழே ‘ஞானகந்தர்வனுக்கு சமர்ப்பணம்’ என கமெண்ட்டும் போட்டிருந்தார். ஆனால் பலர் சஜிதாவின் இந்த செயலை அவ்வளவாக ரசிக்கவில்லை. பிரபல இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இதை பகிரங்கமாகவே கண்டித்திருக்கிறார்.

சஜிதா மாடத்தில்ஜீன்ஸ்ஜேசுதாஸ்ஞானகந்தர்வனுக்கு சமர்ப்பணம்பி.உன்னிகிருஷ்ணன்