ரஜினியின் 80களின் லுக் லீக் ஆகமால் தப்பித்து எப்படி..?

சமீபத்தில் வெளியான ‘கபாலி’ பட டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2 கோடியை நெருங்கிகொண்டு இருக்கிறது.. இதுநாள் வரை வெளியான ரஜினியின் ஸ்டில்களை பார்த்து, படம் முழுவதும் ரஜினியை வயதான கெட்டப்பில் மட்டும் தான் காட்டுவார்களோ என்கிற சின்ன வருத்தம் ரசிகர்களின் மனதில் இருந்துவந்தது.

ஆனால் ‘கபாலி’ டீசரின் இறுதி வினாடிகளில் ரஜினி எண்பதுகளில் உள்ள அவரது தோற்றத்துடன் ஸ்டைலாக முடியை கோதியபடி நடந்துவரும் காட்சி ரசிகர்களுக்கு உற்சாக டானிக்காக அமைந்துள்ளது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், மலேசியாவில் ‘கபாலி’ படப்பிடிப்பு நடைபெற்றபோது ரஜினியின் கெட்டப் இதுதான் என்பது போன்ற புகைப்படங்கள் சாதாரண ரசிகர்களாலேயே மொபைலில் படமாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகின.

ஆனால் இந்த யங் லுக் தோற்றத்தில் ரஜினி நடித்த காட்சிகள் எங்கே படமாக்கப்பட்டன என்கிற புதிருக்கான விடை இப்போது கிடைத்துள்ளது. அதாவது ‘கபாலி”யில் இடம்பெறும் சென்சிட்டிவ்வான காட்சிகளை மலேசியாவில் படமாக்கினால் கதையின் முக்கியமான திருப்பம் கொண்ட காட்சிகள், ரஜினியின் தோற்றம் ரசிகர்களின் மூலமாகவே லீக் ஆகிவிடும் என்பதால் சென்னையில் இருக்கும் மோகன் ஸ்டுடியோவில் மலேசியா போலவே செட் போடப்பட்டு, பாங்காக் நகர தெருக்கள் போலவே ஆர்ட் வேலை செய்யப்பட்டு ‘கபாலி”யின் அதிமுக்கியமான காட்சிகள் அங்கே படமாக்கப்பட்டனவாம்.

KabaliRajiniRanjithகபாலிரஜினிரஞ்சித்