‘கபாலி’யில் காவல்துறை அதிகாரியாக நயன்தாராவின் தந்தை..!

சமீபத்தில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் பார்த்தவர்கள் சாதுப்பசுவாக இருந்துகொண்டு கடைசியில் குடித்துவிட்டு ஏழரையை இழுத்து குழப்பத்தி உண்டுபண்ணிய நயன்தாராவின் அப்பா கேரக்டரை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட மாட்டார்கள். அவர்தான் இயக்குனராக இருந்து நடிகராக மாறிய உதயபானு மகேஸ்வரன் என்பது பலருக்கு தெரியாது..

‘நாளை’ மற்றும் ‘சக்ரவியூகம்’ ஆகிய படங்களை இயக்கி ஒளிப்பதிவாளர் நட்ராஜை ஒரு நடிகராக மாற்றியவர்தான் இந்த உதயபானு மகேஸ்வரன். பின்னர் நவீன் இயக்கத்தில் வெளியான “மூடர் கூடம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தார். இடையில் விஜய் டிவியில் ‘ஆபீஸ்’ தொடரில் நடிக்க அதிலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் எளிதில் ரீச் ஆனது.

தனக்கென்று எந்தவொரு வளையத்திலும் சிக்கிக்கொள்ளாமல் பலதரப்பட்ட சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்ட உதயபானு மகேஸ்வரன், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ளம் ‘கபாலி’ படத்தில் மலேசிய காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

KabaliRajiniUdhayabanu Maheshwaranஉதயபானு மகேஸ்வரன்கபாலிரஜினி