ஜூலை முதல்வாரம் இரண்டு சூப்பர்ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ்..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. ஜுன் மாதம் படத்தின் இசைவெளியீட்டை நடத்த உள்ளதாகவும் அதையடுத்து வரும் ஜூலை-1ஆம் தேதி படம் ரிலீஸாக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இங்கே இப்படி இருக்க, மலையாள திரையுலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் ‘புலி முருகன்’ படமும் வருகிற ஜூலை-7ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.. மலையாள சினிமாவில் இதுவரை இல்லாத மெகா பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இளையதிலகம் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

KabaliMohanlalRajiniRanjithகபாலிமோகன் லால்ரஜினிரஞ்சித்