இந்தியில் சல்மான்கான்… தமிழில் சிபிராஜ்…!


மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டதுபோல இது என்ன சல்மானையும் சிபிராஜையும் கோர்த்துவிடுகிறீர்களே என்றால், விஷயம் இருக்கு பாஸ்.. இதுநாள் வரை மகேஷ்பாபு, விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களை மட்டுமே இந்தியில் ரீமேக் பண்ணி நடித்துவந்த சல்மான்கான் ஒரு சாதாரண ஹீரோ என்கிற அளவில் தெலுங்கில் வலம் வரும் ஆத்வி சேஷ் என்பவர் நடித்த ‘க்ஷணம்’ என்கிற படத்தை இந்தியில் ரீமேக் செய்து நடிக்க இருக்கிறார்..

காரணம் ஹீரோ சாதாரண ஆளாக இருந்தாலும் கதை மாஸான கதை.. படத்தை தயாரித்தது கூட பிரமாண்டத்துக்கு பெயர்போன பிவிபி சினிமா தான்.. ஆக தனக்கு செம பிட்டாகும் என்பதால் தான் கண்ணை மூடிக்கொண்டு இந்தப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சம்மதித்து இருக்கிறார் சல்மான்கான். சரி இதில் சிபிராஜ் எங்கே வந்தார் என்கிறீர்களா..?

விஷயம் இருக்கிறது. இதன் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடிக்க இருப்பது சாட்சாத் நம்ம சிபிராஜ் தான்.. இந்தப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை கைப்பற்றியுள்ள சிபிராஜ், படத்தையும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்க இருக்கிறார்.. இந்தியில் சல்மான்.. தமிழில் சிபிராஜ்.. இது எப்டி இருக்கு..?

SalmankhanSibi Rajசல்மான்கான்சிபிராஜ்