பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் இமைக்கா நொடிகள் படம் திரை உலகில் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது. நயன்தாரா, அதரவா நடித்துள்ள இந்தப்படத்தை டிமாண்ட்டி காலனி படத்தை இயக்கி அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். சமீபத்தில் பெங்களூரு நகரில் படமாக்கக் பட்ட இந்த படத்தின் சண்டை காட்சி சர்வதேச தரத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.
ஹாங்காங்கை சேர்ந்த லீ கோன் யூ என்கிற உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டண்ட் நிபுணர், இந்தப்படத்தின் சண்டை இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஒரு ஆக்சன் ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டம் அவசியம் என்பதை உணர்ந்தான் ஹாலிவுட் சண்டைக்களைஞரை அழைத்து வந்து படமாக்கினார்களாம்.