“குப்பை படங்களையும் நான்குமுறை பார்க்கவேண்டிய தலையெழுத்து எனக்கு” – இசைஞானியின் ஓபன் டாக்


நேற்று ‘மேகா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தப்படத்தை கார்த்திக் ரிஷி என்பவர் இயக்கியுள்ளர். படத்தை தயாரித்துள்ள ஆல்பர்ட் ஜேம்ஸ் இசைஞானியின் தீவிர ரசிகர். இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜாவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய இளையராஜா, “நல்ல படங்களோ அல்லது மோசமான படங்களோ இரண்டிற்கும் எனது இசை நேர்மையானதாக மட்டுமே இருக்கும். மோசமான படம் என்பதற்காக, நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு இசையை அள்ளித்தருகிற சரஸ்வதிக்கு என்னால் எப்படி துரோகம் செய்ய முடியும்..?

பத்திரிகையாலர்களாகிய நீங்கள் ஒரு குப்பை படத்தை பார்த்துவிட்டு படம் மோசம் என விமர்சனம் எழுதுகிறீர்கள். உங்களால் ஒரு தடவை கூட அதை பார்க்க முடியவில்லையே. ஆனால் நான் அந்தப்படத்திற்கு இசையமைக்க நேரும்போது என் தொழில் காரணமாக நான்குமுறை அதை பார்க்கவேண்டியுள்ளது. அப்படிஎன்றால் என் நிலையை பார்த்தீர்களா..? அது என் தலையெழுத்து.. காரணம் அதுதான் என் தொழில்… என்ன செய்வது?” என ஜாலியாக பேசினார் இளையராஜா.

இசைஞானிஇளையராஜாமேகா