மெல்லிசை மன்னருக்காக மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா…!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் தனது குரு ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார் இசைஞானி இளையராஜா. இவர்கள் இருவரும் இணைந்து செந்தமிழ் பாட்டு, செந்தமிழ் செல்வன் உட்பட சில படங்களுக்கு இசையமைத்துள்ளனர். அந்தப்படங்களின் பாடல்களும் சூப்ப்ர்ஹிட்டாகின.

எம்.எஸ்.வியின் மறைவால் மிகவும் துயரத்தில் இருக்கும் இளையராஜா, “எம்.எஸ்.வியின் இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்கமுடியாதவை.. அந்த தாக்கத்தின் அடையாளம் தான் இளையராஜா என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது” என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, எம்.எஸ்.வியின் ஆன்மா சாந்தியடைய அவருக்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்ற ஏற்பாடுகளை செய்திருக்கிறார் இளையராஜா. சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பரும் எழுத்தாளருமான ஜெயகாந்தன் இறந்தபோதும் கூட அவருக்காக இதேபோல திருவண்ணாமலையில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாஎம்.எஸ்.விசெந்தமிழ் செல்வன்செந்தமிழ் பாட்டு