300 வருடங்களுக்கு முந்திய ஆளாக மாறிய ‘சாட்டை’ யுவன்..!

300, 400 ஆண்டுகளுக்கு மும்பு ஜல்லிக்கட்டு தான் முதன்மையான விளையாட்டு. ஜல்லிக்கட்டை தான் உலகறிந்த வீரமாகக் கருதுவார்கள். அப்படி 1700 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த உண்மைக் கதையை மையப் படுத்தி ‘இளமி’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சாட்டை யுவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

1700 ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களின் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக யுவன் ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். ஜிம் போய் பயிற்சி எடுத்து வலுவேற்றிக் கொண்டிருக்கிறார். நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். கல்லூரி அகில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இயக்குனர் ரவிமரியாவின் உதவியாளர் ஜூலியன் பிரகாஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ilamiSattai Yuvanஅனுகிருஷ்ணாஇளமிஜூலியன் பிரகாஷ்