சில மாதங்களுக்கு முன்பு ‘ஒரு இந்தியன் பிரணய கதா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தாமானார் அமலாபால். சத்யன் அந்திக்காடு இயக்கும் இந்தப்படத்தில் முன்னணி இளம் நடிகர் ஃபஹத் ஃபாஸிலுக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலாபால்.
இப்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டிசம்பர்-20ல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதுவரை இரவல் குரலில் மட்டுமே பேசிவந்த அமலாபால், இந்தப்படத்தில் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். எப்போதுமே சொந்தக்குரலில் டப்பிங் பேசிவிடுவது நல்லது என படத்தின் இயக்குனர் சொல்ல, அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட அமலாபால் இனிவரும் மலையாளப் படங்களில் அதை தொடர்ந்து கடைபிடிக்க முடிவு செய்துள்ளாராம்.