பள்ளிக்குழந்தைகளின் கால்களுக்கு கவசம் : உதவிக்கரம் நீட்டும் விஷால்..!


விஷால் தனது ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக அவ்வப்போது மக்களுக்கு உதவிகள் செய்து வருவது தெரிந்தது தான். அந்தவகையில் சென்னையில் புனித அந்தோனியார் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடிகர் விஷால் கலந்து கொண்டு சுமார் 190 குழந்தைகளுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் ஆகியவற்றை வழங்கினர். இனிமேல் தான் ஒவ்வொரு முறை ஷூ வாங்கும் போதும் ஆயிரம் ஷூக்களை குழந்தைகளுக்கு கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் விஷால்.

“எல்லா பள்ளி குழந்தைகளுக்கும் ஷூ, சாக்ஸ் என்பது மிக முக்கியமான விஷயம். இந்த முயற்சிக்கு நான் கண்டிப்பாக உதவ வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். ஏற்கனவே எல்லோருக்கும் 3 லட்சம் ஷூக்கள் வழங்கப்பட்டுள்ளது. நானும் என்னால் முடிந்த அளவுக்கு ஷூ, சாக்ஸ் திரட்ட முயற்சி செய்கிறேன்” என இந்த நிகழ்வில் உறுதியளித்துள்ளார் விஷால்.

“ஒரு படத்துக்காக லட்சக்கணக்கில் நாங்கள் செலவு செய்வது உண்டு. இனி ஒவ்வொரு முறை ஷூ வாங்கும் போதும் ஆயிரம் 1000 ஷூக்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் இப்போது முடிவு செய்துவிட்டேன்” என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார் விஷால். .நடிகர்சங்க வேலை, படங்களில் நடிப்பது என பிசியாக இருந்தாலும் மனிதநேயத்துடன் கூடிய உதவிகளை செய்வதற்கு காலநேரம் பார்க்காத விஷாலின் முயற்சி பாராட்டுக்குரியது.

Help ChildrenRasigar MandramSt.Antony SchoolVishal