‘இது நம்ம ஆளு’ படத்துக்கு ‘U’ சான்றிதழ்..!

படம் இப்ப வருமா..? இல்ல எப்ப வரும்..? என்கிற விஷயத்தை எல்லாம் தாண்டி, சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டு ‘U’ சான்றிதழ் பெற்றுள்ளது.. சிம்பு படம் என்றாலும் இயக்குனர் பாண்டிராஜின் நேர்த்தியான குடும்பத்துடன் பார்க்கும்படி படம் எடுக்கும் தன்மைக்காகவே இது தரப்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

அதேசமயம் இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கினாலும், படத்தின் ரிலீஸில் மிகப்பெரிய போட்டியை சந்திக்கும் என்றே தெரிகிறது. ஏப்-29ல் ‘மனிதன்’, சசிகுமாரின் ‘வெற்றிவேல்’ என இரண்டு படங்கள் வெளியாவதால், மே-6ஆம் தேதிக்கு ரிலீஸை மாற்றியுள்ளார்கள்..

ஆனால் அன்றைய தினம் தான் சூர்யாவின் ‘24’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘கோ-2’ ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் சிம்பு படம் மோதுமா இல்லை இனொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு புதிய சாதனையை படைக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்..

Idhu Namma AaluNayantharaSimbuSooriசிம்புநயன்தாரா