முடிந்தது ‘இது என்ன மாயம்’ ஷூட்டிங்..!

 

தனது ஆத்ம திருப்திக்காக ‘சைவம்’ படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் மீண்டும் தனது வழக்கமான பாணிக்கு மாறிவிட்டார். தற்போது இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து வரும் படம் தான் ‘இது என்ன மாயம்’.. கதாநாயகியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 30 வருடங்களுக்கு முன்பு ‘நெற்றிக்கண்’படத்தில் ரஜினிக்கு ஜோடியாக டூயட் பாடிய நடிகை மேனகாவின் மகள் தான் இந்த கீர்த்தி சுரேஷ்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக விக்ரம் பிரபு தனது டிவிட்டரில் செய்தி சொல்லியிருக்கிறார். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார்.

இது என்ன மாயம்ஏ.எல்.விஜய்கீர்த்தி சுரேஷ்..!சரத்குமார்சைவம்ஜி.வி.பிரகாஷ்நீரவ் ஷாநெற்றிக்கண்மேனகாரஜினிராதிகா சரத்குமார்லிஸ்டின் ஸ்டீபன்விக்ரம் பிரபு