“ராஜமௌலி டைரக்ஷன்ல நடிக்க ஆசை” – மனம் திறந்த சூப்பர்ஸ்டார்..!

  

‘லிங்கா’ படத்தின் தெலுங்குப்பதிப்பின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி. விழாவில் அவர் பேசியபோது, “ஹாலிவுட்ல கூட பெரிய பெரிய படங்கள் வருது. அங்கெல்லாம் ஒரு படம்  ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் எடுத்துப்பாங்க. ஆனால், ஷுட்டிங் போயிட்டால் நாலஞ்சி  மாசங்கள்ல அதை முடிச்சிடுவாங்க. அதை இங்கயும் சொல்லலாம்.

ஆனால், ‘பாகுபலி’ வேற மாதிரியான படம். அது இரண்டு பாகம் எடுக்கிற படம், அதை நான் பார்த்திருக்கேன், அது வேற படம். இயக்குனர் ராஜமௌலிக்கு என்னோட பாராட்டுக்கள். அவர் இந்தியாவின் நம்பர் 1 இயக்குனரா வருவாரு. தெலுங்கு  மக்கள் எல்லாருக்கும் அந்தப்படம் மிகப்பெரிய கௌரவம்” என்றவர் அதற்குப்பின் பேசியது தான் ஹைலைட்டான விஷயம்..

“நான் வெளிப்படையா சொல்றேன், ராஜமௌலி படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சால் நான் கண்டிப்பா நடிப்பேன்” என ரஜினி சொன்னதும் அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க நம்ம ஊர் இளம் முன்னணி நடிகர்கள் கர்சீப்பை போட்டு இடம்பிடிக்க நினைத்துக்கொண்டிருக்க, சூப்பர்ஸ்டாரோ பெரிய துண்டாகவே விரித்துவிட்டார்.

எஸ்.எஸ்.ராஜமௌலிசூப்பர்ஸ்டார்பாகுபலிரஜினிராஜமௌலிலிங்கா