சூறாவளியில் சிக்கிய ‘பென்சில்’ டீம்..!

 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘பென்சில்’. ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தை மணி நாகராஜ் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு அண்மையில் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.. படப்பிடிப்பின்போது ஏற்பட்ட நூரி எனும் கடும் சூறாவளியில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் சிக்கித் தவித்து ஒருவழியாக மீண்டு வந்துள்ளனர்.

ஜப்பானில் உள்ள யட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படக்குழுவினர் விஞ்ச் மூலம் மலை உச்சிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அப்போது மலை உச்சியில் கடும் குளிர் நிலவியது. இதனால் ஏற்பட்ட பிராணவாயு பற்றாக்குறையால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் தாயார் கடுமையாக பாதிக்கப்பட்டபோது குழுவில் இருந்த தயாரிப்பாளர் மருத்துவர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். படப்பிடிப்பு நடத்துவதே மிகப்பெரிய சவாலாகஇருந்தாலும், குழுவினர் ஒத்துழைப்புடன் திட்டமிட்டபடி காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ்.

ஜி.வி.பிரகாஷ்நூரிபென்சில்மணி நாகராஜ்யட்சுகடகேஸ்ரீதிவ்யா