ஹாரர் படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்த லட்சுமிராய்..!

 

ஸ்ரீகாந்த்துக்கு ஓம் சாந்தி ஓம், நம்பியார் என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. கிட்டத்தட்ட அவற்றின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதால் இப்போது அடுத்த படத்திற்கு பூஜை போடசொல்லிவிட்டார் ஸ்ரீகாந்த். படத்தின் பெயர் ‘சௌகார்பேட்டை’. சென்னை சென்ட்ரல் அருகிலுள்ள சௌகார்பேட்டை கதைக்களம் என்பதால் அதையே பெயராக்கியிருக்கிறார்கள்.

படத்தை இயக்குவது ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தை இயக்கிய வடிவுடையான். தற்போது ‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்தை இயக்கி முடித்துவிட்ட வடிவுடையான் இந்தப்படத்தை ஹாரர் காமெடி படமாக இயக்கவுள்ளார்.  கதாநாயகியாக லட்சுமிராய் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பவர் வடிவுடையானின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியுள்ள ஜான் பீட்டர் தான். இந்தப்படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது.

ஷாலோம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ‘சித்தப்பு’ சரவணன், விவேக், கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா, அப்புக்குட்டி, நான் கடவுள் ராஜேந்திரன், பவர்ஸ்டார் என மிகப்பெரிய நட்சத்திர கேங்கே உண்டு. இந்தப்படத்தின் பூஜைக்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் ஸ்ரீகாந்தும் லட்சுமிராயும் ஸ்கூல் யூனிபார்மில் நிற்பதும், இன்னொன்றில் ஹாரர் எபக்ட்டில் இருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

‘சித்தப்பு’ சரவணன்‘சௌகார்பேட்டைRaai LaxmiSowkarpettaiSrikanthஅப்புக்குட்டிஓம் சாந்தி ஓம்கன்னியும் காளையும் செம காதல்கோட்டா சீனிவாசராவ்கோவை சரளாதம்பி வெட்டோத்தி சுந்தரம்நம்பியார்நான் கடவுள் ராஜேந்திரன்பவர்ஸ்டார்லட்சுமிராய்விவேக்ஸ்ரீகாந்த்து