இதுவரை விக்ரம், சூர்யாவுக்கு மாட்டிவிட்ட தனது ஃபேவரைட்டான விறுவிறுப்பு சட்டையை அடுத்து விஷாலுக்கு மாட்டிவிடப் போகிறார் இயக்குனர் ஹரி. ஆம் இவர்களின் கூட்டணி ‘தாமிரபரணி’க்கு பிறகு அடுத்த ஆட்டத்திற்கு தயாராகிவிட்டது.
டைட்டில் என்னவாக இருக்கும் என உங்கள் கற்பனை குதிரைக்கு வேலையெல்லாம் வைக்காமல் படத்திற்கு ‘பூஜை’ என பெயரும் வைத்துவிட்டார் ஹரி. விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்தப்பட்த்தையும் விஷாலே தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ். மேலும் ராதிகா, கௌசல்யா, சித்தாரா என நட்சத்திர பட்டாளமே உண்டு. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை தமிழ்ப்புத்தாண்டு பிறந்ததும் துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.