ஹரி-விக்ரம் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது ‘சாமி ஸ்கொயர்’.. ஏற்கனவே பம்பர் ஹிட் அடித்த சாமியின் வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது. கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி என இரண்டாம் பாகத்தில் பல புதிய முகங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு என்பது சதவீதம் நிறைவடைந்து விட்டது. தற்போது நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் காரணமாக படப்பிடிப்பிற்கு தற்காலிக இடைவேளை விடப்பட்டுள்ளது. ஹரியின் வேகத்தை கணக்கிட்டு பார்த்து, இந்தப்படத்தை வரும் ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்துவிடலாம் என தயாரிப்பாளர் தரப்பில் முடிவெடுத்துள்ளார்கள் என சொல்லப்படுகிறது.