ஹரீஷ் உத்தமன் என்கிற பெயரை அடிக்கடி டைட்டில் கார்டில் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் பெயருக்கேற்ற மாதிரி இல்லாமல் பாண்டியநாடு முதல், இப்போது வெளியான தொடரி வரை பெரும்பாலான படங்களில் வில்லனாகவே அவதாரம் எடுத்து வருபவர்.. தனி ஒருவன் படத்தில் மட்டும் நல்லவன் கேரக்டர்..
இப்போது விஜய்சேதுபதி நடித்துள்ள ‘றெக்க’ பத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் படஹ்தின் நாயகன் விஜய்செதுபதியோ, ஹரீஷ் உத்தமன் ஹீரோவாக நடிப்பதற்கான அனைத்து தகுதியும் கொண்டவர் என சமீபத்தில் நடைபெற்ற ‘றெக்க’ படத்தின் பிரஸ்மீட்டில் பாராட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது,
“சில வருடங்களுக்கு முன்பு ஹரிஷ் உத்தமன் கதாநாயகனாக நடித்த படத்தை பார்த்தேன். அந்த படத்தில் ஹரிஷ் உத்தமனின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால், அதன் பிறகு ஹரிஷ் உத்தமனுக்கு கதாநாயகனாக நடிக்க வில்லை. தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். ஹரிஷ் உத்தமன் ஹீரோவாக நடிக்க வேண்டும். ஒரு ஹீரோவுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் ஹரிஷுக்கு இருக்கிறது. அவருக்கு ஹீரோ வாய்ப்பு வந்தால் நான் சந்தோஷமடைவேன். கூடிய விரைவில் நானும் ஹரிஷ் உத்தமனை வைத்து படம் தயாரிப்பேன்’ என்றார்.