ஹேப்பி பர்த்டே விஜய்சேதுபதி..!

ஒரு வளரும் நடிகன் தன்னை எப்படி சினிமாவில் ஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கு விஜய்சேதுபதியை விட ஒருவரை சிறந்த உதாரணமாக சொல்லிவிட முடியாது. ஒரு படம் ஹிட்டாகி விட்டால் பணம் வருகின்றதே என்று கதையை சரியாக தேர்வு செய்யாமல் அவசர கதியில் படங்களை ஒப்புக்கொண்டு வந்த வேகத்திலேயே காணாமல் போகும் நடிகர்களின் மத்தியில் விஜய் சேதுபதி வித்தியாசமானவர் தான்.

அவரின் பக்குவமான செயல்பாடுகள் தான் அவரை வெற்றிப்படிகளில் ஏற்றிவிட்டுக் கொண்டிருக்கின்றன. நான் ஒரு ஹீரோ.. எனக்காக கதை பண்ணுங்கள் என தன்னைச்சுற்றி தேவையில்லாத வட்டத்தை போட்டுக்கொள்ளாமல் கதையின் கதாபாத்திரத்திற்கு தான் பொருந்துகிறோமா என்பதை மட்டும் பார்த்து படங்களை ஒப்புக்கொள்ளும் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு போவார் என்பதில் சந்தேகம் இல்லை.

இன்று பிறந்தநாள் காணும் விஜய்சேதுபதிக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

‘Aandavan Kattalai’DharmaduraiIdharkuthane Aasaipattai BalakumaraIraiviKadhalum kadanthu pogumNaanum Rowdy DhaanNaduvula Konjam Pakkatha KaanomPizzaRekkaSethupathiSoodhu KavvumThenmerku ParuvakaatruVijay Sethupathiவிஜய் சேதுபதி