ஹேப்பி பர்த்டே த்ரிஷா..!

த்ரிஷா.. தமிழ்சினிமாவின் எவர்கிரீன் ஏஞ்சல். பத்து வருஷத்துக்கும் மேலாக ஒருத்தர் சினிமாவில் நிலைத்து நிற்பது வேறு விஷயம். ஆனால் அறிமுகமானதில் இருந்து இன்று வரை தனது தோற்றத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்க முடியுமா என்றால் அது த்ரிஷா ஒருவருக்கு மட்டுமே சாத்தியாமாகியிருக்கிறது

1999ல் ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷா அடுத்தவருடமே சிம்ரனுக்கு டஃப் கொடுக்கும் நடிகையாக மாறுவார் என யார்தான் எதிர்பார்த்திருக்க கூடும்..? ஆனால், இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. த்ரிஷா அதற்கு 100% தகுதியானவர் தான். கதாநாயகியாகவே கோலோச்சிவரும் த்ரிஷாவுக்கு இப்போதும் கைநிறைய படங்கள் இருப்பது ஆச்சர்யமான விஷயம்.

ரஜினி, தனுஷ் இருவரைத் தவிர அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமை த்ரிஷாவுக்கு மட்டுமே உண்டு. கூடிய விரைவில் தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் த்ரிஷா.. இன்று பிறந்தநாள் காணும் த்ரிஷாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

த்ரிஷா