ஹேப்பி பர்த்டே டூ ‘மாயா’…!

2005ல் ‘அய்யா’ படத்தின் மூலமாக நுழைந்து “ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்” என தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ்சினிமா ரசிகர்களை பலவருஷமாக கட்டிப்போட்டு வைத்திருக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்.. ஆம்.. 31 முடிந்து 32ல் அடியெடுத்து வைக்கிறார். மம்முட்டியுடன் தற்போது நடித்துவரும் ‘புதிய நியமம்’ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் நம் ‘மாயா’.

மலையாளத்தில் இருந்து வந்தாலும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இன்றும் முன்னணி ஹீரோயின் இவர்தான். அதிலும் இந்த வருடம் நயன்தாரா வருடம் என்று சொல்லும் விதமாக அவர் நடித்த படங்கள் வரிசையாக வெளியாகி வசூலையும் வாரிக்குவித்தன.

தனி ஒரு ஆளாக ஒரு படத்தை தன்னால் தாங்கிப்பிடிக்க முடியும் என்பதை ‘மாயா’ வெற்றி மூலம் நிரூபித்தார் நயன்தாரா. இடையில் விடுபட்டு போயிருந்த தனது மலையாள சினிமா உலக உறவையும் இந்தவருடம் வெற்றிகரமாக புதுப்பித்துள்ளார்.

இடையில் இரண்டுமுறை இவரது வாழ்க்கையில் காதல் சூறாவளி சுழன்று அடிக்க, அவற்றையெல்லாம் ஒதுக்கி, அதிலிருந்து வெளியேறி இப்போது புடம்போட்ட தங்கமாக மின்னுகிறார் நயன்தாரா.. மீண்டும் தனது புது இன்னிங்ஸில் ரவுண்டுகட்டி அடிக்கிறார் நயன்.

தமிழ்சினிமாவில் நயன்தாரா மேற்கொள்ள வேண்டிய பயணம் இன்னும் இருக்கிறது. அவரது வெற்றிப்பயணம் இனிதே தொடர, இன்று பிறந்தநாள் காணும் நயன்தாராவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

MayaNanum Rowdy thanNayantharaThani Oruvan