‘ஒய் நாட் ஸ்டுடியோ’ சசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

கூட்டாக சேர்ந்து தயாரித்தது தான் என்றாலும் தனது முதல் தயாரிப்பான ‘தமிழ்ப்படம்’ மூலமாக தான் ஒரு வித்தியாசமான தயாரிப்பாளர் என தைரியமாக நிரூபித்தவர் ‘ஒய் நாட் ஸ்டுடியோ’ சசி. அதன்பின் ‘வ’ குவார்ட்டர்-கட்டிங், ‘காதலில் சொதப்புவது எப்படி’ என காமெடி கதைக்களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தயாரித்தார்.

‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை தமிழுக்கு அறிமுகப்படுத்தியதும் இவர்தான். தற்போது வசந்தபாலன் இயக்கிவரும் ‘காவியத்தலைவன்’ படத்தை தயாரித்துள்ள இவர் அதன் வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.

இன்று பிறந்த நாள் காணும் சசிக்கு நமது  behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

ஒய் நாட் ஸ்டுடியோகாதலில் சொதப்புவது எப்படிகாவியத்தலைவன்சசிசசிகாந்த்தமிழ்ப்படம்துல்கர் சல்மான்வ - குவார்ட்டர்-கட்டிங்வசந்தபாலன்வாயை மூடி பேசவும்