ஹேப்பி பர்த்டே டூ விக்ரம்..!

தன்னம்பிக்கை.. மனம் தளராமல் போராடும் குணம்.. லட்சியத்தை அடையும் வெறி.. இதுதான் விக்ரம். சேதுவில் ஆரம்பித்த அவரது உக்கிர தாண்டவம் இன்றுவரை குறைந்தபாடில்லை. அகோர நடிப்பு பசி கொண்டதாலோ என்னவோ கமர்ஷியல் வெற்றிகளை இவர் கருத்தில் கொள்வதில்லை. அதற்கேற்ற மாதிரி காசி, பிதாமகன், தெய்வத்திருமகள் ஆகிய படங்களும் அவரது நடிப்பிற்கு மகுடம் சூட்டவும் தவறவில்லை.

இரண்டு வருடத்திற்கு ஒரு படம் என பிடிவாத கொள்கை வைத்திருந்தவர், அதை சற்றே தளர்த்தி, இதோ இப்போது கௌதம் மேனன் டைரக்சனில் துருவ நட்சத்திரம்’ மற்றும் விஜயசந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

விக்ரம் இன்று தனது 52 வயதில் அடியெடுத்து வைக்கிறார் என்றாலும் நம்புவதற்கு சிரமமாகத்தான் இர்டுக்கிறது.. இன்று பிறந்தநாள் காணும் ‘சீயான்’ விக்ரமிற்கு நமது ‘behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Chiyaan VikramDhuruva NatchathiramHappy Birthday To VikramSaamy 2