இன்று தனது 66வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். திரையுலகில் கிட்டத்தட்ட 3௦ வருடங்களை தாண்டிய அவரது பயணம் ஒன்றும் பூப்பாதை இல்லை. ரொம்பவே கரடு முரடானது. இப்போது அவர் வந்து அமர்ந்து இருக்கும் இடம் என்பது இனி இன்னொருவருக்கு கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் இத்தனை வருட ரஜினியின் மொத்த சம்பாத்தியம்.
ரஜினியுடன் நடித்த அவர் வயதுள்ள சமகால நடிகர்களாகட்டும்… அல்லது அவரைவிட பத்து வயது குறைந்தவர்களாகட்டும்… இன்றைய தேதிகளில் அவர்களுக்கு மேக்கப் போட்டாலும் எண்பது, தொண்ணூறுகளில் இருந்த அவர்களது உருவத்தை மீட்டுக்கொண்டுவருவது என்பது கல்லில் நார் உரிக்கிற மாதிரித்தான்.
ஆனால் ரஜினி ஒருவருக்குத்தான் மேக்கப் போட்டால் மீண்டும் இளமை திரும்பும் வரத்தை ஆண்டவன் கொடுத்திருக்கிறான். கோடிகளில் ஒருவருக்குத்தான் இந்த வரம் கிடைக்கும். ஆம்.. சூப்பர்ஸ்டார் என்பது பட்டம் அல்ல.. அது ஒரு வரம். தற்போது ‘கபாலி’ படத்தில் தனது வயதுக்கேற்ற வித்தியாசமான கெட்டப்புடன் நடித்து வருகிறார் ரஜினி..
கடந்த இரண்டு மாதங்களாக இவர் மலேசியாவில் தங்கியிருந்த நாட்களில் மலேசியாவே தினமும் திருவிழா கோலம் பூண்டது. அது ரஜினிக்காக மட்டும் தான்.. இன்று பிறந்தநாள் காணும் நமது சூப்பர்ஸ்டாருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.