ஹேப்பி பர்த்டே ட்டூ ஸ்ரேயா !

தெலுங்கில் இருந்து தமிழ்சினிமாவுக்கு வந்த உத்தரகாண்ட் சுந்தரி. படித்ததெல்லாம் டெல்லியில்.. உனக்கு 20 எனக்கு பதினெட்டு படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை உரசிய ஸ்ரேயா, தமிழில் தனது நான்காவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார்.

தொடர்ந்து விஜய், தனுஷ் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த ஸ்ரேயா மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இன்று 32 வயதை தொடும் ஸ்ரேயாவை பார்த்தால் வயதாகிவிட்ட மாதிரியா தெரிகிறது?

மற்ற நடிகைகளிடம் இல்லாத ஸ்ரேயாவின் இன்னொரு சாதனை கிட்டத்தட்ட 15 படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதுதான். விரைவில் ஷ்ரேயா நமக்கெல்லாம் திருமண சாப்பாடு போடும் வைபவமும் நடக்கட்டும் என, இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரேயாவுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Shreyaஸ்ரேயா