பிரியதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!


கிட்டத்தட்ட 32 வருடமாக திரையுலகில் வெற்றி பயணம் செய்துகொண்டிருப்பவர் இயக்குனர் பிரியதர்ஷன்.. கேரளா தான் இவரது பூர்வீகம் என்றாலும் இவரை மலையாள இயக்குனர் என அவ்வளவு சுலபமாக பிரித்துவிட முடியாது. காரணம் தமிழில் நல்ல படங்களை கொடுத்ததுடன் தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே அறிமுகமானவர்.. மலையாளம், தமிழ் தவிர இந்தி சினிமாவில் இவருக்கென ஒரு தனி இடம் நிரந்தரமாக உண்டு.

1984ல் மலையாளத்தில் ‘பூச்சைக்கொரு மூக்குத்தி’ என்கிற படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியபோது இவரது முதல் படத்தில் இருந்தே மோகன்லாலுக்கும் இவருக்குமான நட்பு ஆரம்பித்தது. மலையாளத்தில் மிகச்சிறந்த நடிகர்-இயக்குனர் கூட்டணி என்றால் கண்ணை மூடிக்கொண்டு மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணி என்றுதான் சொல்வார்கள்.. எண்ணிக்கையில் மட்டுமல்ல, கிளாசிக், மாஸ் என மோகன்லாலின் வெரைட்டியான படங்கள் எல்லாம் பிரியதர்ஷன் கைவண்ணத்தில் உருவானவைதான்.

தற்போது தமிழில் ‘சில சமயங்களில்’ என்கிற படத்தை இயக்கிவரும் பிரியதர்ஷன், அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் ‘ஒப்பம்’ என்கிற படத்தை இயக்கவிருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் பிரியதர்ஷனுக்கு நமது behind frames சார்பாக பிறந்தநாள் இனிய வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Happy Birthday To PriyadharshanPriyatharshanSila samayangalil