நடிகர் திலகத்தின் மகனாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தாலும், தனக்கென நடிப்பில் தனி பாணியை உருவாக்கி முன்னணி ஹீரோவாக மாறியவர் இளைய திலகம் பிரபு.. பல வருடங்கள் கதாநாயகனாக கோலோச்சிய பிரபு, இன்று மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக, தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத நபராக விளங்குகிறார்..
கோபப்படாத, எந்நேரமும் சிரித்த முகத்துடன் காட்சி தருகின்ற, திரையுலகில் அனைவருடனும் நல்ல நட்பை கொண்டிருக்கின்ற பிரபு, எப்போதும் பாஸிடிவ் எனர்ஜியை மட்டுமே மற்றவர்களுக்கு கடத்துபவர்.. இன்று அவரது மகன் விக்ரம் பிரபு இளம் முன்னணி நடிகராக தாத்தா, அப்பாவின் பெயரை காப்பாற்றி வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் இளைய திலகம் பிரபுவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.