விஷயம் தெரியாதவர்கள், அட ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த பொண்ணு என்னமா நடிச்சிருந்தது என ஆச்சர்யப்பட்டார்கள்.. விபரம் அறிந்தவர்கள் 13 வருஷத்துக்கு முன்னாடி ‘காதல் ரோஜா’படத்தில் நடித்த அந்த அப்பாவி பொண்ணா இது.. நம்பவே முடியலையே என அதிசயித்தார்கள்..
ஆச்சர்யம்.. அதிசயம்.. அதுதான் பூஜாகுமார். விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து, தனது நடிப்பால் விஸ்வரூபம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களிலும் கமலுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பூஜாகுமார்.
இன்று பிறந்தநாள் காணும் பூஜாகுமாருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.