கே.விஸ்வநாத்.. இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தாத்தாவாக நடித்த இவரை ஒரு நடிகராக மட்டும் தான் தெரிந்திருக்கும். ஆனால் இவர் தெலுங்குத்திரையுலகம் போற்றிக் கொண்டாடும் ஒரு இயக்குனர் என்றோ, இவரது படங்கள் பலமுறை தேசிய விருதுகள் வாங்கிய விஷயமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான ஒரு நேரடி தெலுங்கு படமான ‘சங்கராபரணம்’ தமிழ்நாட்டில் அள்ளிக்குவித்த வசூல் அப்போது இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. 1965ல் இவர் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானபோது இவரின் முதல் ஹீரோவாக நடித்தவர்தான் மறைந்த மாபெரும் நடிகர் நாகேஸ்வரராவ்..
கமலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான இவர் இயக்கிய ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’ ஆகியவை இன்றளவும் கமல் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இன்று பிறந்தநாள் காணும் 84 வயதான இளைஞர், மாமனிதர் கே.விஸ்வநாத்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.