காளி வெங்கட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

 

கதாநாயகர்கள் வருடத்திற்கு நூறு பேர் அறிமுகமாகிறார்கள். ஆனால் நகைச்சுவை நடிகர்கள் உருவாவதுதான் தமிழ்சினிமாவில் அரிதான ஒன்றாக இருக்கிறது. இந்த சூழலிலும் அவ்வப்போது அத்திப்பூத்த மாதிரி சில நகைச்சுவை நடிகர்கள் உதயமாவது உண்டு. அப்படி உருவானவர் தான் காளி வெங்கட்..

சின்னசின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த காளி வெங்கட் படிப்படியாக தனது திறமையால் தெகிடி, பூவரசம்பீப்பி, வாயை மூடி பேசவும் என ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமாகி ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் தன்னை ஒரு ஸ்திரமான நகைச்சுவை நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார்.

தற்போது காத்தாடி, உறுமீன், இறுதிச்சுற்று, இந்தியா-பாகிஸ்தான், ஈட்டி ஆகிய படங்களில் பிசியாக நடித்துவருகிறார்..

இன்று பிறந்தநாள்  காணும் காளி வெங்கட்டுக்கு நமது  behind frames தனது இனிய பிறந்தநாள்வாழ்த்துக்களை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

இந்தியா-பாகிஸ்தான்இறுதிச்சுற்றுஈட்டிஉறுமீன்காத்தாடிகாளி வெங்கட்முண்டாசுப்பட்டி