தெலுங்கு திரையுலகில் கோலோச்சிய தன் தாத்தா என்.டி.ராமாராவின் பெயரை தனக்கும் சூடிக்கொண்டு களத்தில் குதித்தவர் தான் இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர். இவரது அதிரடியான நடனமும், அதிவேகமான வசன உச்சரிப்பும் இவரை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக்கியது.
அதன்பிறகு சிம்மாத்ரி, எமதொங்கா, பிருந்தாவனம், பாட்ஷா என இவர் நடித்தது எல்லாமே மாஸ் படங்கள் தான். விஜய் முதல் விஜயகாந்த் வரை இவரது படங்களை வாங்கி ரீமேக் செய்து நடித்த அதிசயமும் தமிழ்சினிமாவில் நடந்தது.
என்.டி.ஆர் குடும்பத்திலிருந்து நடிகர் பாலகிருஷ்ணாவிற்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் நுழைந்து மிகப்பெரிய அளவிற்கு பெயர் பெற்றது ஜூனியர் என்.டி.ஆர் மட்டுமே. இன்று பிறந்தநாள் காணும் ஜூனியர் என்.டி.ஆருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.