ஹேப்பி பர்த்டே ட்டு ‘சந்திரமுகி’..!

ஒரு சில நட்சத்திரங்கள் சினிமாவில் கோலோச்சிவிட்டு பின் சினிமாவை விட்டு விலகி இல்லற வாழ்க்கையில் ஒதுங்கிக்கொண்டாலும் சினிமாவில் அவர்களது இடம் மட்டும் காலியாகவே இருக்கும். அப்படித்தான் ஜோதிகாவின் இடமும் யாராலும் நிரப்பப்படாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது.

நொடிக்கு நூறு முக பாவனை காட்டி ரசிகர்களை வசியும் செய்யும் சக்தி ஜோதிகாவுக்கு மட்டும் எளிதாக கைவந்தது. இன்று வரும் அறிமுக நடிகைகள் பலரும் தங்களுக்கு ரோல்மாடல் என குறிப்பிடும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும் ஜோதிகா தான்.

முன்னணி நடிகையாக இருக்கும்போதே சூர்யாவை காதல் மணம் புரிந்து இல்லத்தரசியாக மாறி தனது குடும்பத்தை கவனித்துவரும் ஜோதிகா தற்போது தனது நடிப்புக்கு தீனிபோடும் மிகச்சிறந்த கதை ஒன்று கிடைத்ததாலேயே தனது கணவர் தயாரிப்பிலேயே மீண்டும் நடிக்க வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் இந்த ‘சந்திரமுகி’க்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

‘சந்திரமுகி’ஜோதிகா