நடிகர் திலகத்தின் வாரிசாக அறிமுகம் ஆனாலும் தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு தந்தையின் நடிப்புக்கு மாற்றுக்குறையாத நடிப்பால் அனைவரயும் கவர்ந்தவர் நம் இளையதிலகம் பிரபு. கிட்டத்தட்ட அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தனது திறமையை நிரூபித்துவிட்டவர் பிரபு.
கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன்னணி கதாநாயகனாக கோலோச்சிய அவர் கடந்த பத்து வருடங்களாக குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார். தற்போது அவரது குடும்பத்தில் அடுத்த கலையுலக வாரிசாக அவரது மகன் விக்ரம் பிரபுவும் இளம் கதாநாயகனாக துடிப்புடன் முன்னேறி வருகிறார்.
மற்றவர்களுக்கெல்லாம் புத்தாண்டு தினம் மட்டும் தான் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் பிரபுவுக்கோ வருடத்தின் இறுதி நாளும் மகிழ்ச்சியான நாள் தான். காரணம் இன்று அவர் பிறந்தநாள். இன்று பிறந்தநாள் காணும் நம் இளையதிலகத்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.