ஹேப்பி பர்த்டே ட்டூ துல்கர் சல்மான்..!

ஆச்சர்யம்.. ஆனால் உண்மை தமிழக சூப்பர் ஸ்டாரின் மருமகனுக்கும் மலையாள மெகாஸ்டாரின் மகனுக்கும் சேர்ந்தாற்போல இன்றுதான் பிறந்த நாள்.. தனுஷுக்கு 31 முடிகிறது. ஆனால் துல்கர் சல்மானுக்கு இப்போதுதான் 28 வயது ஆகிறது.

இதுவரைக்கும் பனிரெண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் துல்கர், தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார். தனது தந்தையின் பெயரை காப்பற்றும் விதமாக இப்போது முன்னணி இளம் ஹீரோவாக சிறப்பாக நடித்துவருகிறார்.

தனுஷுக்கு பிறந்த நாள் கிப்ட்டாக ‘வி.ஐ.பி’ வெற்றி அமைந்தது போல, துல்கருக்கு வெள்ளியன்று ரிலீசான ‘விக்ரமாதித்யா’ மிகப்பெரிய வெற்றியை பிறந்தநாள் பரிசாக கொடுத்திருக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் துல்கர் சல்மானுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

 

Dulquar Salmanதுல்கர் சல்மான்