ஹேப்பி பர்த்டே ட்டூ டாக்டர் ராஜசேகர்..!

இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும் ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் இருவருக்குத்தான் தரப்பட்டிருந்தது.. ஒருவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.. இன்னொருவர் ‘இது தாண்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர்.

நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்றாலும் டாக்டர் ராஜசேகர் கொடி நாட்டியது என்னவோ தெலுங்கு சினிமாவில்தான். கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்ததோடு மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கையும் ஏற்படுத்தின.

தற்போது இவர் எதிர்பார்ப்பது ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கதையின் நாயகனாக, இளம்பெண்ணுக்கு தந்தையாக இவர் நடித்துள்ள ‘பட்டப்பகலு’ படத்தின் ரிலீசைத்தான். இந்தப்படத்தை தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.

இன்று பிறந்தநாள் காணும் டாக்டர் ராஜசேகருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

இது தாண்டா போலீஸ்கேப்டன் விஜயகாந்த்டாக்டர் ராஜசேகர்பட்டப்பகலு