இன்று தமிழ்சினிமாவில் காமெடி படங்களின் ஏகபோக சக்கரவர்த்தி யாரென்றால் அது இயக்குனர் சுந்தர்.சி தான். குறிப்பாக ஆள்மாறாட்ட காமெடியில் இவரை அடித்துக்கொள்ள இன்றுவரை ஆளே இல்லை. தன் படங்களில் கவுண்டமணியை துணைக்கு வைத்துக்கொண்டு இவர் ஆடிய ருத்ர தாண்டவத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிடமுடியாது. அதேபோல காலமாற்றத்திற்கேற்ப வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோருடன் கைகோர்த்து இறங்கி அடிக்கவும் அவர் தவறவில்லை.
ஒரு நடிகராகவும் வெற்றிக்கொடி நாட்டிய சுந்தர்.சி, கடந்த இரண்டு வருடங்களாக நடிப்புக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டு ‘கலகலப்பு’, ‘மதகஜராஜா’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘ஆம்பள’’ படங்களை இயக்கினார். மிரட்டலாக வெளியான அரண்மனை’ மூலம் நடிப்பை மீண்டும் தொடர்ந்துள்ளார்.. தற்போது இவர் இயக்கத்தில் அரண்மனை-2 ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
மாறிவரும் தலைமுறை மாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் பண்ணிக்கொள்வதால் தான், சுந்தர்.சி இன்றும் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகிறார் என்பது தான் உண்மை. இன்று பிறந்தநாள் காணும் சுந்தர்.சிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.