சாக்லேட் பாய்ன்னு பொண்ணுங்க எல்லாமே சொல்லுவாங்களே, அதுக்கு அர்த்தம் என்னான்னு டிக்சனரியை புரட்டி பார்த்தா சித்தார்த்ன்னு ஒரு அர்த்தம் போட்டிருக்கலாமா என்னவோ.? அந்த அளவுக்கு ஒரு காலத்தில்.. ஏன் இப்பவும் கூடத்தான், இளம் ரசிகைகளின் கனவுக்கண்ணன் பட்டியலில் இவருக்கும் ஒரு ஸ்திரமான இடம் உண்டு.
இவர் குட்டுப்பட்டது ஷங்கரின் மோதிரக்கையில் தான் என்றாலும் இவரை வாரி அரவணைத்தது தெலுங்கு திரையுலகம் தான். ஆனால் ஒரு தமிழனான தனக்கு தெலுங்கில் நல்ல இடம் கிடைத்தாலும் தமிழிழும் தனக்கான இடத்தை பிடித்தே தீருவேன் என்று இப்போது இரண்டாவது இன்னிங்ஸிலும் தீயாக வேலை செய்துவருகிறார் இந்த குமார்.
ஜிகர்தண்டா வெற்றிமுகம், காவியத்தலைவன், எனக்குள் ஒருவன் இறங்குமுகம் என எந்தமுகம் காட்டினாலும் அதையெல்லாம் ஒரேமாதிரி எடுத்துக்கொண்டு இன்னும் நடிப்பில் பன்முகம் காட்ட தயாராகவே களத்தில் இருக்கிறார் சித்தார்த். இன்று பிறந்தநாள் காணும் சித்தார்த்திற்கு நமது ‘behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது