தன்னம்பிக்கையின் மறு வடிவம் என சரத்குமாரை தாராளமாக சொல்லலாம். காரணம் ஒரு தயாரிப்பாளராக, ஒரு குணச்சித்திர நடிகராக, பின்னர் அதிரடி வில்லனாக அதன்பின் கதாநாயகனாக என படிப்படியாக மேலேறித்தான் சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைந்திருக்கிறார்.
அதிரடிக்கு ‘சூரியன்’, ஆக்ரோசத்திற்கு ‘நாட்டாமை’, அமைதிக்கு ‘சூர்யவம்சம்’ நட்புக்கு ஒரு ‘நட்புக்காக’ என நடிப்பில் பல முகங்கள் காட்டிய சாதனையாளர்தான் சரத்குமார். கே.எஸ்.ரவிகுமாரும் சரத்குமாரும் கூட்டணி சேர்கிறார்கள் என்றால் அது சூப்பர்ஹிட் படம் தான் என பலமுறை நிரூபித்துள்ளார்கள். அதேபோல சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றால் அதுவும் ஹிட் படம் என பூஜையின்போதே சொல்லிவிடலாம்.
தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல.. மலையாள திரையுலகமும் கூட இவரை அன்புடன் அரவணைத்துக் கொண்டது. தொடர்ந்து பல வருடங்களாக நடிகர் சங்க தலைவராக இருந்துவரும் சரத்குமார், தற்போதையை சூழலில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அதையும் சமாளித்து வலம் வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சரத்குமாருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.