தன்னம்பிக்கையின் மறு உருவம் என இயக்குனர் சமுத்திரக்கனியை தாராளமாக சொல்லலாம். அது அவர் இயக்கும் படங்களிலும் எதிரொலிக்கும். மேலும் தனது ஒவ்வொரு படத்திலும் இன்றைய இளைஞர்களுக்கு, சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லவும் இவர் தவறுவதே இல்லை.
அதேபோல இயக்குனராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடிக்கும் படங்களுக்கு என தனி மெரிட் கூடுவது மறுக்கமுடியாத உண்மை.. பாசத்தந்தையாக, அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்தவர், இப்போது ‘மாஸ்’ படம் மூலம் வில்லன் முகமும் காட்ட இருக்கிறார்.
இவரது படங்களைப்போல இவரது நடிப்புக்கும் மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய மரியாதை உண்டு. இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.