தமிழில் ‘வாமனன்’ படத்தில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, இந்தி என மாறிமாறி நடித்த அவர்மீது, ஸ்ரீதேவியுடன் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படம் ஒரு வெளிச்சம்போட்டுக் காட்ட, அதன்பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான ‘எதிர்நீச்சல்’ படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து சிவாவுடன் ‘வணக்கம் சென்னை’, விக்ரம் பிரபுவுடன் ‘அரிமா நம்பி’ அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’, விமலுடன் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, என கடந்த வருடத்திய தமிழ்சினிமாவின் ஆட்ட நாயகி யாரென்றால் அது பிரியா ஆனந்த் தான்.. இந்தவருடம் கௌதம் கார்த்திக்குடன் நடித்த ‘வை ராஜா வை’ படம் வெளியானது.
தற்போது அசோக் செல்வனுடன் ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த். இன்று பிறந்தநாள் காணும் ப்ரியா ஆனந்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.