மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் பவன் கல்யாண்.. இன்று பிறந்தநாளை கொண்டாடும் பவன் கல்யாணுக்கு 44 வயது ஆகிவிட்டது என்றால் நம்பமுடியவில்லை.
அன்று பார்த்த அதே இளமை.. இன்னும் சொல்லப்போனால் நாளுக்கு நாள் இளமை கூடிக்கொண்டுதான் போகிறது. பின்னே சும்மாவா பவர்ஸ்டார் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.. பவன் கல்யாண் சினிமாவில் அடியெடுத்து வைத்த இந்த 18 வருடங்களில் 22 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
காரணம் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும் அது நச்சென்று இருக்கவேண்டும் என்பது இவரது ஃபார்முலா. நடிப்போடு மட்டுமே நின்றுவிடாமல் ஸ்டண்ட் காட்சிகள் ஒருங்கிணைப்பு, பின்னணி பாடுவது என சகல துறைகளிலும் இறங்கி கலக்கும் பவன் கல்யாண், ‘ஜானி’ என்ற ஒரு படத்தை இயக்கியும் உள்ளார்.
இவர் நடித்துள்ள ‘சர்தார் கப்பார்சிங்’ படம் ரிலீஸுக்கு தயாராக இருக்க, இன்று அவரது பிறந்தநாள் பரிசாக அந்தப்படத்தின் டீசர் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இன்று பிறந்தநாள் காணும் பவன் கல்யாணுக்கு நமது behind frame தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.