2008ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த நானிக்கு எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘நான் ஈ’ கைகொடுக்க, தெலுங்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகவும் மாறிவிட்டார். ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் அவரது துறுதுறு நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்தன.
ஆனாலும் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் நல்ல ஒரு ஸ்திரமான இடத்தை பிடித்துவிடும் உத்வேகத்தில் இருக்கிறார் நானி. அவர் தெலுங்கில் நடித்துள்ள ‘எவடே சுப்ரமண்யம்’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. இன்று பிறந்தநாள் காணும் நானிக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.